பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை...! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...! - காவலர்கள் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொன்னை அருகேயுள்ள எஸ்.என்.பாளையம் போயர் காலனியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாய கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரது மகள் சந்தியா (17).

சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 600 மதிப்பெண்களில் 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

மேற்படிப்பை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தொடர வேண்டும் என்ற கனவில் இருந்த சந்தியாவை, அவர் விரும்பாத கல்லூரியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலும் ஆழ்ந்த கவலையிலும் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சந்தியா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதைப் பார்த்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை(Government Vellore Medical College Hospital)மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த துயரச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plus 2 student commits suicide by hanging herself Family shock Police investigating intensively


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->