பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம்! கவுரவித்த முதல்வர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் திரைப்பட பின்னணி பாடகியாக வலம் வரும் மெல்லிசை அரசி பி. சுசீலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல மொழிகளில் 40 ஆண்டுகளாக 25,000 மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். 

ஆந்திராவைச் சேர்ந்த இவரை கவுவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 

மேலும் இந்த விழாவில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர் மு.பி. சாமிநாதன், கர்நாடகா இசைக்கலைஞர்கள், பேராசிரியர்கள், செனட்  உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

play back singer p Susheela got doctorate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->