நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. எங்கு தெரியுமா.?
Physical chalanger employment camp in thiruvarur district tomorrow
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நாளை (டிசம்பர் 18ஆம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முகாமில் தொழில் பயிற்சி மற்றும் கடனுதவி போன்ற பல வாய்ப்புகளும் வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Physical chalanger employment camp in thiruvarur district tomorrow