இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்.!!
perunchithiranar memorial day 2022
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும்.

இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
perunchithiranar memorial day 2022