முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்... அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றியம், பனைமலை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் என பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது "திமுக ஆட்சியில் இருக்கும் வெளிப்படை தன்மைக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலன் பற்றி தான் சிந்திக்கும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் குறைவாக நகை அடகு வைத்து கடன் பெற்றவர்களில் ரூ.5000 கோடிக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.12,410 கோடி அளவுக்கு அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதற்காக நிதி வழங்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். தமிழக முழுவதும் 60 வயதை தாண்டி அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வழங்கப்படும்" என விழா மேடையில் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyaswamy said Senior Citizens Allowance will come to houses


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->