கருப்பு ஆடைக்கு விதித்த தடை நீக்கம்.. பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநர் தலைமையில் 28/06/2023 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. 

அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்துருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக தற்பொழுது அந்த அறிவிப்பை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதமிகு ஆளுநர் அவர்களின் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிற அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி இவ்வலுவலகம் சுற்றறிக்கை வழியாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மாணாக்கர்கள் மற்றும் அவரது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு மேற்கொண்ட சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்ப பெறப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன்" என தந்தை பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University lifts black dress ban


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->