பகுத்தறிவின் சிற்பி தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று.!!
periyar ev ramasamy birthday 2021
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்" பெரியாருக்கு 'புத்துலக தொலைநோக்காளர்", 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்", 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை" என பாராட்டி விருது வழங்கியது.
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.
English Summary
periyar ev ramasamy birthday 2021