#பெரம்பலூர் | வீடு கட்டாமலேயே பண மோசடி - அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!
Perampalur Some fraud incident
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்டாமலேயே பண மோசடி செய்ததாக, பெரம்பலூர் அருகே பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த ஸ்ரீரங்கம்மாள் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் திருச்சியில் பணி புரிந்து கொண்டு, அங்கேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், மணிகண்டன் பெயரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்று ஒதுக்கப்பட்டு, அவரின் தாயார் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மணிகண்டன் தெரிவிக்கையில், நான் வீடு கட்டுவதற்கு அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில், வீடு கட்டியதாக கூறி, என் தாய் ஸ்ரீரங்கமாளின் வங்கி கணக்கில் மூன்று தவணையாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் வரவய வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி என்பவரும், அவரது கணவரும் எனது தாயை வங்கிக்கு அழைத்து கொண்டு சென்று, பஞ்சாயத்து பணம் அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ஏறிவிட்டதாக கூறி, அவர் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்துக் கொணடனர் என்று, வங்கி புத்தகத்தை ஆதாரமாக மணிகண்டன் காட்டினார்.

மேலும் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Perampalur Some fraud incident