அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராகிங் பிரச்சனை மோதல்..! பெரம்பலூரில் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராகிங் பிரச்சனையால் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், பி.பி.ஏ துறையில் பணியாற்றி வரும் பாண்டியன் என்ற மாணவர், தனது சட்டையின் பட்டனை சரியாக போடாமல் வந்துள்ளார். இதனைக்கண்ட முதுகலை கம்பியூட்டர் சைன்ஸ் மாணவர் அமுதன், சட்டை பட்டனை போடச்சொல்லி இருக்கிறார். 

மேலும், மாணவரை ரேகிங் செய்திருக்கிறார். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் கல்லூரி வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை கமிட்டி அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மோதல் சம்பவம் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, இளங்கலை மாணவர் பாண்டியன் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Govt Arts Science College Students Fight Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->