தோனி இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது..இப்படித்தான் உதவுனாரு -மிஸ்ரா பேட்டி - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், துணிச்சலான தலைவராகவும் புகழப்படுகிறார். 2011 உலகக் கோப்பைக்கு பிறகு, சீனியர் வீரர்களை தைரியமாக கழற்றி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தவர் தோனி. அந்த முடிவுகள், இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தன.

ஆனால் அதே நேரத்தில், வாய்ப்பை இழந்த சில சீனியர் வீரர்கள், தோனி தங்களது கேரியரை பாதித்ததாக விமர்சனங்களை முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, தோனி குறித்து முற்றிலும் மாறுபட்ட பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி இல்லாமல் இருந்திருந்தால், தமக்கு இந்திய அணியில் இடமே கிடைக்காமல் போயிருக்கும் என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தோனியின் தலைமையில்தான் முதன்முறையாக இந்திய அணியில் இடம் பெற்றதாகவும், அதன்பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கவும் அவர் தான் முக்கிய காரணம் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். அணியில் மீண்டும் சேர்ப்பதற்கு தோனி சம்மதம் தெரிவித்ததே தனது மறுபிரவேசத்திற்கு அடித்தளமாக அமைந்ததாக அவர் விளக்கியுள்ளார்.

மேலும், பிளேயிங் லெவனில் இடம் பெற்றபோது, தோனி எப்போதும் தன்னிடம் ஆலோசனைகள் வழங்குவார் என்றும், எந்த நேரத்திலும் தனக்கு ஆதரவு குறைந்தது இல்லை என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் தொடரை நினைவுகூர்ந்த மிஸ்ரா, அந்த போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த நினைத்து இயற்கையாக பந்து வீசாமல் இருந்ததாக கூறினார். அப்போது தோனி நேரில் வந்து, அதிகம் யோசிக்காமல் இயல்பாக பந்து வீசச் சொன்னதாகவும், அந்த அறிவுரையை பின்பற்றியதும் விக்கெட்டுகள் கிடைத்ததாகவும் கூறினார்.

அன்றைய போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது தனது சிறந்த பந்து வீச்சு என்றும், அந்த நாள் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றும் அமித் மிஸ்ரா தெரிவித்தார். விக்கெட்டுகள் கிடைக்காவிட்டால் இந்தியா தோற்கும் என்று தோனி நம்பியதாகவும், அதனால் தான் முழு நம்பிக்கையுடன் தன்னை ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், தோனியின் தலைமைத்துவம் சிலருக்கு வாய்ப்பை குறைத்திருக்கலாம் என்றாலும், பல வீரர்களின் வாழ்க்கையை உருவாக்கியதும் உண்மை என்பதைக் அமித் மிஸ்ராவின் பேச்சு தெளிவாக வெளிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If it werenot for Dhoni I wouldnot have gotten a chance in the Indian team This is how he helped me Mishra interview


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->