எடப்பாடியின் கூட்டணி அழைப்புக்கு தவெக கொடுத்த உடனடி பதில்! ஒரே கண்டிஷன் தானாம்! எடப்பாடி ஆடிபோய்ட்டராமே! - Seithipunal
Seithipunal


2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது இந்த கருத்து, புதிதாக அரசியல் களத்தில் வந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பாகப் பார்க்கப்பட்டது.

இதற்கு உடனடியாக பதிலளித்த தவெக தரப்பு, தங்களின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளது. தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். எங்கள் அரசியல் எதிரியுடனும், கொள்கை எதிரியுடனும் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டோம். இந்த நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால்தான் கூட்டணி பற்றி யோசிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, தவெக-வை “தூய கட்சி அல்ல, கலப்பட கட்சி” என விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மல்குமார், “எங்கள் தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என்று கடுமையாக விமர்சித்ததற்காக, அதிமுகவினர் பதில் சொல்ல வருவது வேடிக்கையாக உள்ளது. திமுகவும் அதிமுகவும் அரசியல் பங்காளிகளாக இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது” எனக் கூறினார்.

இதன் மூலம், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தவெக எந்தவித சமரசமும் இன்றி, விஜய்யை மையமாகக் கொண்டு மட்டுமே அரசியல் கூட்டணியை அமைக்கும் என்பதையும், அதிமுகவுடன் உடனடி கூட்டணி வாய்ப்பு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tvk immediate response to Edappadi call for an alliance The only condition is that Edappadi will not play


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->