பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையா? எதிர்பார்ப்பில் மக்கள்.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் லாடபுரம், அம்மாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். 

அதிக அளவில், கோழி கொண்டை பூ மற்றும் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பூக்களை சாகுபடி செய்யும் மக்களுக்கு தங்களது உழைப்பிற்கு ஏற்ற கொள்முதல் விலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், போதிய லாபம் இன்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். அதில் இப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம், பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் தொழிற்சாலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரம்பலூர் மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur district perfume factory


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->