கிருஷ்ணகிரி : பல மாதங்களாக வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் தவிக்கும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன முனியப்பன் கொட்டாய் என்ற கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கங்கமடுகு கிராமத்திலிருந்து குப்தா நதியை கடந்து தான் செல்ல வேண்டும். 

கடந்த ஒருவருடமாக பெய்த மழை காரணமாகவும், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை லாரனமாகவும், இந்த நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மிகவும் ஆபத்தான நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி பயணம் செய்து வருகின்றனர். 

தற்போது ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அனைவரும்  கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இரண்டு மாதங்களாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும், முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை அனைவரும் மருத்துவ வசதி இல்லாமலும் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர்.

மேலும், ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதில் ஒரு சிலர் மட்டும் ஆபத்தான முறையில் ஆற்றில் ஊன்று கோளை வைத்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் வைத்தனர். 

அதன் படி, பெற்றோர்கள் தனது குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். பல மாதங்களாக கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் இந்த கிராம மக்களுக்கு அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People stuck at home for two months no bridge to cross river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->