காஞ்சிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அமைந்துள்ள பாலாற்றின் தரைப்பாலத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் கடந்து செல்கின்றன. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாளத்தில் சென்ற கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாற்றின் தரைபாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் இயக்க கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People captured the trucks on bridge in Kanchipuram


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->