மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணை.. MLA அனி பால் கென்னடி வழங்கினார்!
Pension Order for Fisher Elders Presented by MLA Anne Paul Kennedy
உப்பளம் தொகுதி வாம்பாகீராபளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு 85க்கும் மேற்பட்டோருக்கு MLA அனி பால் கென்னடி ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார்:
புதுச்சேரி: மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாம்பாகீராபளையம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ சமுதாய முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு, வாம்பாகீராபளையத்தைச் சேர்ந்த 85க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.

நிகழ்வில் நலத்துறை அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டம், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள், கழக சகோதரர்கள் யாவரும் கலந்து கொண்டனர்.
English Summary
Pension Order for Fisher Elders Presented by MLA Anne Paul Kennedy