பழனி முருகன் கோவிலில் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் எளிதில் மலைக் கோயிலுக்கு சென்று வர ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும் சுற்றுலா அனுபவத்தையும் கொடுப்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் மூலம் செல்ல விரும்புகின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் பக்தர்கள் ரோப் கார் மூலம் அதிகமாக செல்ல விரும்புகின்றனர்.

இதில் ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

அந்த வகையில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் பழனி ரோப்கார் மையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக இரண்டு நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazhani rope car service stop today and tomorrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->