'அரோகரா அரோகரா' என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் பழனி முருகன் கும்பாபிஷேகம் நிறைவு.! - Seithipunal
Seithipunal


 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் இன்று நடைபெறும் கும்பாபிஷேகம் நிகழ்வை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பக்தர்களின் 'அரோகரா அரோகரா ' என்ற கோஷத்துடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pazhani Murugan temple kumavishegam photos


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->