ரூ.13 லட்சம் டெபாசிட் செலுத்தினால் அமெரிக்க விசா - டிரம்ப் புதிய திட்டம்!
Paying Rs. 13 lakhs as a deposit for the American visa Trumps new plan
விசா காலத்தை தாண்டி வெளிநாட்டினர் தங்குவதை தடுப்பதற்காக ரூ.13 லட்சம் டெபாசிட் செலுத்தினால் அமெரிக்க விசா என்ற புதிய திட்டத்தை டிரம்ப் அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வர்த்தக வரியை உலக நாடுகளுக்கு அதிகமாக உயர்த்தி அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை சோதனை முறையில் டிரம்ப் அரசு அமல்படுத்தப்பட உள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது.கடந்த 2023-ம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-"அமெரிக்கா வருபவர்களுக்காக சுற்றுலா, வர்த்தகம் ஆகிய காரணங்களுக்காக அமெரிக்கா வர பி-1. பி-2 விசாக்கள் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், 15 ஆயிரம் டாலர்வரை (ரூ.13 லட்சம்) மதிப்புள்ள பிணைப்பத்திரத்தை டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
விசா காலத்தை கடந்து தங்கி இருக்கும் வெளிநாட்டினரால் ஏற்படும் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் டிரம்ப் அரசின் வெளிநாட்டு கொள்கையின் முக்கிய தூணாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
இத்திட்டம், இம்மாதம் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதிவரை அமலில் இருக்கும். எந்தெந்த நாட்டினர் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது திட்டம் அமலுக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Paying Rs. 13 lakhs as a deposit for the American visa Trumps new plan