புகை மூட்டத்தால் பயணிகள் அவதி! வந்தே பாரத் ரெயிலில் ஏசியால் ஏற்பட்ட கோளாறு...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி வந்த 'வந்தே பாரத்' ரெயிலில் ஏ.சி.பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த புகைமூட்டத்தை பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை அருகே 'வந்தே பாரத்' ரெயில் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஏ.சி.பேட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அவதிக்குளாகினர்.

மேலும், நேற்று கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்று தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passengers suffer due to smog AC malfunction in Vande Bharat train


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->