ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. 41 தொகுதி வேண்டும்..காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
Participation in governance power Need 41 constituencies Congress MLAs raise the battle flag
2026-சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவதுடன், ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கு மட்டும் இடம் கொடுக்காமல் புதியவர்களுக்கும் எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கிராம கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் பயணமாக தமிழகம் வருகைதந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கிராம கமிட்டிகளை அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள், கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், எஸ்.சி.துறை மாநில தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சிலர், 2026 சட்ட சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கும், கூடுதல் எண்ணிக்கையில் இடம் கேட்பது. குறைந்தபட்சம் 41 இடங்களிலாவது கண்டிப்பாக போட்டியிட வேண்டும்'' என்றும் வலியுறுத்தி உள்ளனர் என்று தகவல் தெரிகிறது .
இதேபோல , அணித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய சிலர் 2026-சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கு மட்டும் இடம் கொடுக்காமல் புதியவர்களுக்கும் எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திதாக தகவல் கூறப்படுகிறது.
English Summary
Participation in governance power Need 41 constituencies Congress MLAs raise the battle flag