பொங்கல் தினத்திலும் போராட்டம்; 'பணி நிரந்தரம் செய்யும் வரை போராடுவோம்'; பகுதி நேர ஆசிரியர்கள் திட்டவட்டம்..!
Part time teachers continue their protest on Pongal day
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் புறத்திற்கு பின் தற்கொலை செய்துகொண்ட உடற்பயிற்சி ஆசியர் கண்ணனுக்கு நெடி வேண்டும் என்று போராடினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 08-ஆம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்த பகுதி நேர ஆசிரியர் கூட்டு இயக்க நிர்வாகிகள், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தனர்.

அதன்படி, இன்று பொங்கல் பண்டிகை தினம் என்றும் பாராமல் தொடர்ந்து எல்லாவது நாளாகவும் போராட்டம் நடத்தினர். சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.ஜி. அலுவலகம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணனுக்கு நீதி வேண்டும், தி.மு.க.வின் சட்டசபை தேர்தல் வாக்குறுதி என்ற 18ஐ நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்று பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர். அவர்களை ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி, கிளிண்ட், தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு என வெவ்வேறு பகுதிகளில், ஆசிரியர்களை இறக்கி விட்டுள்ளனர்.
English Summary
Part time teachers continue their protest on Pongal day