பெற்றோர்கள் அதிர்ச்சி...! சென்னையில் மாணவனை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


சென்னையின் ஜெ.ஜெ.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவன் மீது உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியால் தாக்கியதாக வெளியாகியுள்ள சம்பவம் கல்வி வட்டாரத்திலும், பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பள்ளியில் 6-ம் வகுப்பில் கல்வி பயிலும் 11 வயது மாணவன், உடற்பயிற்சி ஆசிரியரின் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது. உலோக சுத்தியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாணவனின் கையில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், பலத்த ரத்தக்காயமும் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து மாணவனின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஜெ.ஜெ.நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில், உடற்பயிற்சி ஆசிரியரான நவீன் ஜூட் கோனே (45) கைது செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? சம்பவத்திற்கு முன்பு ஏதேனும் வாக்குவாதம் அல்லது வேறு சூழ்நிலை ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

பள்ளிக்குள் மாணவன் மீது நடைபெற்ற இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் கல்வி சூழலின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் முழுமையான பின்னணியை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents shocked How gym teacher who brutally attacked student hammer Chennai caught


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->