காசை கொடுத்தும், உறவினர்களால் மன வேதனையில் துடிதுடித்த பெற்றோர்கள்! கதவை திறந்தவர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


சேலம் குகைபகுதியில் வசித்து வந்தவர் சிவராமன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருமணமாகி தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் மற்றொருவர் மனவளர்ச்சி குன்றி உள்ளான்.

இந்நிலையில் சிவராமன், மனவளர்ச்சி குன்றிய மகன்  மற்றும் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் தனக்கு தெரிந்த நபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து அதன் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் பெற்றவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் தகராறு செய்து வந்துள்ளார்.

     

மேலும் 4 லட்சம் கடன் பெற்ற உறவினர் ஒருவர் திரும்ப்ஸ்  பணத்தை தராமல் இருந்துள்ளார். இதனால் சிவராமன் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் வருமானமின்றி வறுமைக்குள் தள்ளப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

 இந்நிலையில்  இன்று காலை அவர்களது வீடு வெகுநேரம் திறக்காத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
இப்பொழுது சிவராமன் அவரது மனைவி மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகன் மூன்று பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parents commits suicide with mentally challenged boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal