கடலூரில் பரபரப்பு! அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Panic in Cuddalore Bomb threat to Government Medical College Hospital
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவர் போலிசாருக்கு தொலைபேசியில் தகவல் அளித்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டார். அவரது உத்தரவின் பேரில், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், மருத்துவமனை வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பரபரப்புடன் அங்கு குவிந்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Panic in Cuddalore Bomb threat to Government Medical College Hospital