சசிகலா, ஓபிஎஸ்க்கு அரசியலில் செக்! அச்சத்தில் தவிக்கும் விஜயபாஸ்கர்! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வைத்து ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சிக்கியுள்ளார். எனினும் அதனை சமாளிக்க அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி முடுக்கி விட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கின் விசாரணைக்கு உட்பட்டால் தன் மீது உள்ள பழைய வழக்குகளையும் தமிழக அரசு கையில் எடுக்குமோ என்ற அச்சத்தில் விஜயபாஸ்கர் உள்ளார்.

மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரையில் சசிகலாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் இதனையே காரணமாக வைத்து மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் அந்த ஆணையத்தின் அறிக்கையில் ஓபிஎஸ் அரசியல் காரணங்களுக்காகவே தர்ம யுத்தத்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் பேசி வருகிறார். இதன் காரணமாக மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்தால் மக்களிடத்தில் அவப்பெயர் ஈடுபடும் என பழனிச்சாமி தருவதாக கருதுவதாக தெரிய வருகிறது. எனவே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வைத்து ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு அரசியலில் செக் வைத்து ஓரங்கட்ட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palanisamy wants to out Sasikala and Panneerselvam from politics


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->