#தூத்துக்குடி || வீடு புகுந்து பள்ளி சிறுமிக்கு நாடக காதலன் அரங்கேற்றிய கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவன் வேல்முருகன், இவன் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறான். இவன் அதே ஊரை சேர்ந்த தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளிச் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, நாடக காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

ஆசை வார்த்தைக்கும் நாடக காதலுக்கும் விழுந்த அந்த பள்ளி மாணவியும் காதலித்ததாக தெரிகிறது. மேலும், அந்த பள்ளி மாணவியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனக்கு உங்கள் பெண்ணை மணம் முடித்துத் தருமாறு கேட்டுள்ளான்.

தங்கள் மகள் சிறுமி என்பதை புரிவைத்த பெற்றோர்கள், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அந்த பள்ளி சிறுமியிடம் பெற்றோர்கள், "இந்த வயதில் காதலிப்பது தவறு., உனது கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். இந்த வயதில் நீ காதலித்து திருமணம் செய்தால்., உன்னுடைய வாழ்க்கை, எதிர்காலம் என அனைத்தும் வீணாகிப் போய்விடும்" என்று அறிவுரை கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பள்ளி சிறுமி தனது காதலை கைவிட்டு உள்ளார். மேலும் வேல்முருகன் இடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேல்முருகன் கடந்த 28ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனியாக இருந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளான்.

அப்போது அந்த சிறுமி நான் படிக்க வேண்டும்.. மீண்டும் காதலிக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன். தான் எடுத்து வந்திருந்த விஷத்தை சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளான். மேலும் வேல்முருகனும் அந்த பூச்சி மருந்தை கொடுத்துள்ளான். 

இந்நிலையில், பெற்றோர்கள் வீடு திரும்பியபோது சிறுமி நடந்த விவரத்தை சொல்லியுள்ளார். இதனை அடுத்து வேல்முருகன் மற்றும் அந்த பள்ளி சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வேல்முருகன் மீது கொலை முயற்சி மற்றும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு வேல்முருகனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OTTAPIRADAM DRAMA LOVE ISSUE


கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?
Seithipunal