P.E.T. பீரியடில் மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .! - Seithipunal
Seithipunal


P.E.T பீரியடில் மற்ற வகுப்புகள் எடுக்க பயன்படுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக புது பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது.

தற்போது தனியார் பள்ளி சங்கங்களின் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும். அதன்பிறகு ஜனவரியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அதை ஆய்வு மேற்கொண்டு ஆணை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து விளையாட்டு துறையுடன் இணைந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் போன்ற மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது என ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Others class don't taken in PET Period


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->