ஆஸ்கர் விருது விழா! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்...!
Oscar Award Ceremony Kamal Haasan thanks Chief Minister for his congratulations
நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டதாவது,"உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது.
இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! "என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி "என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Oscar Award Ceremony Kamal Haasan thanks Chief Minister for his congratulations