ஆம்னி பேருந்துகளை இன்று வழக்கம் போல் இயக்க உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக கட்டணம் வசூலித்ததாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுதபூஜை விடுமுறையால் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

இதனை சாதகமா பயன்படுத்திக்கொண்ட சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மாலை 6 மணிமுதல் பேருந்துகளை இயக்க போவதில்லை என அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் அம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் தெரிவித்துக் கொள்வது, இன்று வெளியான தகவலுக்கும் நமது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை எங்களிடம் இது குறித்து யாரும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நமது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் 80% பேருந்துகளும் இன்று கட்டாயம் வழக்கம் போல் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பயணிகளுக்கு இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் படி நமது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.மாறன் அதை சுற்றி வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ordered to operate omni buses as usual today


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->