சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ் கட்சியின் பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்து வழக்குகளில் அ.தி.மு.க பொது குழுவின் தீர்மானத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்து அதிமுக அறிவித்தது. 

மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் இருக்கையை உதயகுமாருக்கு வழங்க அ.தி.மு.க தரப்பில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு 4 முறை கடிதம் அனுப்பப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று கேள்வி நேரத்திற்கு பிறகு ஓ.பி.எஸ் இருக்கை மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கோரிக்கை வைத்தார். 

இதனால் ஓபிஎஸ் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு எதிர்க்கட்சித் துணை தலைவருக்கான இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS seat change Legislative Assembly


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->