தனிக்கட்சி! 2வது தர்மயுத்தம்! தேர்தல் கூட்டணி உறுதி - களமிறங்கிய ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


தற்போது 2-வது தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாகவும்  ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரின் ஆதரவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

‘அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, "தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. 

அப்படி தொடங்கினாள் சட்ட சிக்கல் ஏற்படும். அதனால் தான் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் அமைப்பாக தற்காலிகமாக செயல்படுகிறோம். 

கோவையில் வரும் ஜனவரி 6-ல் நடைபெற இருந்த மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது. கட்சி உடைந்துவிட கூடாது எபிட்ரா ஒரே காரணத்திற்காக தான், பொறுமையாக இருந்தேன். 

நாம் மேற்கொண்ட முதல் தர்மயுத்தத்தின் மூலம் அம்மாவின் (ஜெயலலிதாவின்) எண்ணத்தை நிறைவேற்ற தொடங்கினோம். இப்போது நாம் 2-வது தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறோம்" என்று ஓபிஎஸ் பேசினார்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில், அடுத்த 15 நாட்களுக்குக்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

வரும் மக்களவை  தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம். பறிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கவே இந்த உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About new party and Election 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->