திமுக கூட்டணியில் ஓபிஎஸ், தேமுதிக.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சுட சுட கச்சா என்று களைகட்டத் தொடங்கியுள்ளது. முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், வியூகங்கள், சுற்றுப்பயணங்கள், வீடு வீடாக பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் என முழு ஸ்பீடில் இறங்கிவிட்டுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடியலை தேடுவோர் உள்ளிட்ட பல கட்சிகள் இருப்பதோடு, சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது புதிய அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள் திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு குறித்த ஊகங்களும் தீவிரமாகியுள்ளது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து அவரது பதில்கள் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளன. “திமுக கூட்டணியில் தேமுதிக, ஓ.பிஎஸ் உள்ளிட்டோர் வந்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதில் இறுதி முடிவை எடுப்பது திமுக தலைமைதான். நாம் யாரையும் அழைக்கவில்லை. ஏனெனில் எங்கள் கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று கருதவில்லை,” என அவர் தெளிவாக கூறினார்.

மேலும், “நாட்டை, மக்களை, அரசியல் சட்டத்தை சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் வெளியானது ஒரு நேர்மறை முடிவாகவே கருதுகிறோம்” என்றார்.

பாஜகவின் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களையும், வாக்காளர் பட்டியல் மற்றும் குடியுரிமை சட்டம் தொடர்பான நடவடிக்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். “இவை தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைகளல்ல. பாஜக தொடர்ந்து தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில், நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு தொடர்பாகவும், “இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி, ஆணவக் கொலை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். ஆகஸ்ட் 9ஆம் தேதி விசிக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வரும் மக்கள் வரவேற்பை குறித்து, “அவரது கூட்டங்களுக்கு அதிக மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இறுதி முடிவை மக்கள் தேர்தல் நேரத்தில் தான் எடுப்பார்கள். காலமே அதற்கான பதிலை வழங்கும்” என்று திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து அரசியல் மையமாக மாறும் தமிழகத்தில், அனைத்து கட்சிகளும் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. 2026 தேர்தல், பல கோணங்களில் சவாலானதும், மாற்றங்களைத் தக்கவைக்கும் திறனுடையதுமாக அமையப்போவது உறுதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS DMDK in DMK alliance Sensational information given by Thirumavalavan


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->