ஊட்டி மலைஇரயில் சேவை கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையான மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை சுமார் 7.10 மணியளவில் புறப்படும் மலை இரயிலானது, குன்னூருக்கு 10 மணிக்கு செல்கிறது. 

பின்னர் குன்னூரில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் இரயில் 12 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது. பின்னர் மீண்டும் மறுமார்கத்தில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மாலை சுமார் 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்து சேருகிறது.

இந்த இரயில் சேவைக்கான கட்டணம் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மார்ச் 1 ஆம் தேதி 2020 ஆன இன்று முதல் அமலாகிறது. பயணசீட்டு பெரும் நடைமுறையும் இணையவழியாக மாற்றப்படவுள்ளது. 

இதன் அடிப்படையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முன்பதிவு முதல் வகுப்பு கட்டணம் ரூ.365 ஆகவும், ஊட்டிக்கு ரூ.470 ஆகவும், முன்பதிவு இரண்டாம் வகுப்பு கட்டணம் குன்னூருக்கு ரூ.100 ஆகவும், ஊட்டிக்கு ரூ.145 ஆகவும் வசூல் செய்யப்படுகிறது. மேலும், முன்பதிவில்லா கட்டணமாக குன்னூருக்கு ரூ.50 ஆகவும், ஊட்டிக்கு ரூ.75 ஆகவும் வசூல் செய்யப்பட்டு வந்தது..

இந்த நிலையில், தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முன்பதிவு முதல் வகுப்பு கட்டணம் ரூ.445 ஆகவும், ஊட்டிக்கு ரூ.600 ஆகவும், முன்பதிவு இரண்டாம் வகுப்பு கட்டணம் குன்னூருக்கு ரூ.190 ஆகவும், ஊட்டிக்கு ரூ.295 ஆகவும் வசூல் செய்யப்படுகிறது. மேலும், முன்பதிவில்லா கட்டணமாக குன்னூருக்கு ரூ.110 ஆகவும், ஊட்டிக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த சேவையான மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை சுமார் 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மலைஇரயிலுக்கு மட்டும் பொருந்தும் என்றும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இயக்கப்படும் இரயிலுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty train fare increased


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->