கீழடி ஆய்வறிக்கை! கூட்டத்தொடரில் அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க திமுக நோட்டீஸ்...!
Keezhadi research report DMK notice to adjourn House for discussion session
இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கவிருக்கும் இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.

அதும்மட்டுமன்றி,இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு பல திட்டமிட்டுள்ளது.அதுமாதிரியான, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
மேலும், குறிப்பாக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் 'திருச்சி சிவா' நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
English Summary
Keezhadi research report DMK notice to adjourn House for discussion session