'அரசியல் பிரச்சினைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தாதீர்கள்': உச்ச நீதிமன்றம்..!
Supreme Court says dont use enforcement in political issues
அரசியல் பிரச்சினைகளில் அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குறித்த வழக்கில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதனை தொடர்ந்து, குறித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம்ன் தலைமை நீதிபதி கூறியதாவது: 'தயவு செய்து எங்களை வாய் திறக்க வைக்காதீர்கள், ஏனென்றால் அமலாக்கத்துறை பற்றி சில கடுமையான கருத்துக்களை கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களுக்கு மஹாராஷ்டிராவில் சில அனுபவம் கிடைத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் பிரச்னைகளுக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அரசியல் பிரச்னைகளை தேர்தல் களத்திலேயே கடைபிடியுங்கள், அமலாக்கத்துறையை பயன்படுத்தாதீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
English Summary
Supreme Court says dont use enforcement in political issues