விஐடி பல்கலையில் பி.டெக் படிப்பு; ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

''விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 20) தொடங்கியது.

https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 02-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 09 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வு நடைபெறும். மாணவா்கள் தாங்கள் படித்த இடம் அல்லது சொந்த ஊரை அடிப்படையாகக் கொண்டு தோ்வு மையங்களை தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வு எழுதலாம்.'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online application registration for B Tech programs at VIT University has begun


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->