ஓராண்டுக்கான பாஸ்: நாளை முதல் சுங்கச்சாவடிகளில் அமல்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது.இந்த நடைமுறை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக சுங்க சாவடிகள் மீது வாகன ஓட்டிகள் பல புகார்களை தெரிவித்தனர்.அதிகமாக கட்டண வசூலிப்பது போன்ற புகார்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

 இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது முன்பாக தொகையாக வசூல் செய்தது அதன் பின்னர் பாஸ்ட்ராக் மூலம் கட்டணத்தை சுங்கச்சாவடிகள் வசூல் செய்தது. இந்த நிலையில் புதிய திட்டமான ஓராண்டுக்கான பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு கையாண்டு அதை செயல்படுத்த திட்டமிட்டது,

 அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிக்கு வாகனங்கள் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் பாஸ் வாங்கி ஓராண்டு 200 சுங்கக்கு சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்ற திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி இத்திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி இத்திட்டம் நாளை நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும் அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டர் தகுதியும் சரிபார்க்கப்படும்.

 பின்னர் 3000 கட்டணத்தை செலுத்தி  செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம்  மூலம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும், இரண்டு மணி நேரத்துக்குள் பாஸ் செயல்படுத்தப்படும், இந்த பாஸ் தனியார் கார் ஜீப் பேர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ,

வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால் முன்னறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயல் இழக்க செய்யப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலையில் மட்டுமே செல்லுபடி ஆகும் இந்த பாஸ், மாநில நெடுஞ்சாலை மாநில உள்ளாட்சி நிர்வாக கட்டணம் மையங்கள் பார்க்கின் போன்ற இடங்களில் வழக்கான வழக்கமான முறையில் செயல்படும் அதற்கான கட்டங்கள் கட்டணங்கள் வழக்கம் போல் வரிசையில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oneyear pass Implementation at toll plazas starts from tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->