மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு பயிற்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!  - Seithipunal
Seithipunal


பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சென்னை– 56, பூவிருந்தவல்லியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் “புத்தககட்டுநர்” (ஆண்கள்,பெண்கள்) தொழிற்பயிற்சி பிரிவில் தரமான உணவுடன் கூடிய விடுதி வசதியுடன் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.  

இப்பயிற்சியில் சேர்ந்து கொள்வதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 01.08.2025 அன்று 18 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.08.2025 மாலை 5.30க்குள் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையம், பூவிருந்தவல்லி,சென்னை– 56 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ   விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One year training for differently-abled individuals District Collector Prathaps call


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->