வேங்கைவயல் விவகாரம்.. களம் இறங்கிய நீதிபதி.. ஒரு நபர் ஆணைய விசாரணை தொடக்கம்..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நிலையில் புதுக்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் சந்தேகிக்கும் நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதி பெற்றனர். ஆனால் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவு விட கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் 2 மாதகத்திற்குள் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சத்ய நாராயணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வேங்கைவயல் கிராமத்திலும் விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில் இந்த வழக்கின் விசாரணை அது அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One man commission probe into the vengaivayal issue has begun


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->