ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் செப்டம்பம் 8 ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மக்கள் கொண்டாடி வரும் திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம். அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்

கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அம்மாநிலத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களிலும் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onam festival 9 districts holiday in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->