ஓடுனா விட்டுருவோமா! பக்கத்து வீட்டு பெண்ணை துரத்தி துரத்தி வெட்டும் முதியவர்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சுந்தர்நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் நிஷாந்த். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 91 வயதான கந்தசாமி என்பவர், நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டை ஒட்டி வாழை மரத்தை வளர்த்து வந்துள்ளார். அந்த வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால், வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு நிஷாந்த் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் நிஷாந்தின் மனைவி 30 வயதான சிந்துஜா, வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அரிவாளுடன் அங்கு வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று சொல்லி திடீரென்று சிந்துஜாவின் கையில் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அவர், அலறியவாறு தெருவில் ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

இச்சம்பவத்தில்,காயமடைந்த சிந்துஜாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old man who chases and try to kills neighbors woman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->