தீயில் கருகி பலியான மூதாட்டி, குப்பைக்கு தீவைத்த போது நடந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


குப்பைக்கு தீவைத்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உப்புப்பாளையம் (கிழக்கு) பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவா் நடராஜ் (வயது 62). இவரின் தாய்வேலுமணி (85), வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை கூட்டி தீ வைத்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் புடவையில் தீப்பற்றியது. அக்கம்பக்கதினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பலத்த தீக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட வேலுமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Lady Death in Thiruppur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->