அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய வயதான தம்பதியினர்.! பதறவைக்கும் சிசிடிவி காட்சி.!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தில், விவசாயி சண்முகவேலு இரவு நேரத்தில் தனது வீட்டில் வெளியே அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது கொள்ளையர்கள் இருவர் முகமூடி அணிந்துகொண்டு, ஆயுதங்களை கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். 

அதில் ஒரு கொள்ளையர் முதியவர் சண்முகத்தை கழுத்தை துணியால் நெரித்துள்ளார். அப்போது கீழே விழுந்த முதியவர் புரண்டு எழுந்து கொள்ளையர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு சண்முகவேலூவின் மனைவியை செந்தாமரை வீட்டில் இருந்து வெளியே வந்து கொள்ளையர்களுடன் கணவன் போராடிக் கொண்டிருந்த கண்டு கையில் கிடைத்த நாற்காலி, செருப்பு போன்ற பொருட்களை வீசினர்.

இதற்கு இடையே கொள்ளையர்கள் ஒருவர், செந்தாமரை அணிந்து  நான்கு சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். கடைசி வரை போராடி அவர்களை மடக்கிப் பிடிக்க முதியவர்கள் முயன்றனர். ஒரு வழியாக இறுதியில் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தற்போது அவர்கள் போராடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old couple fight with robbers video


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal