ஆம்னி டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு..பயணிகள் அதிர்ச்சி!
Oh my Ticket prices have doubled Passengers are shocked
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .இதை ஒட்டி டெல்லியில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றுகிறார். இதே போல் தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பினை ஏற்பர் .அதன் பின்னர் சிறப்புரையாற்றுவார்கள்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது .குறிப்பாக நாளை சுதந்திர தினம் நாளை மறுநாள் சனிக்கிழமை அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பலர் தென் மாவட்டங்களில் உள்ள பலர் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.
முக்கியமாக ஊர் பகுதிகளில் ஆடித் திருவிழா நடந்து வருவதால் சென்னையில் இருந்து தென் மாநிலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதாவது சாதாரண நாட்களை சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 650 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கட்டணம் இருக்கும்.
இந்த தொடர் விடுமுறையால் 1500 ரூபாய்க்கு குறைந்த கட்டணம் இல்லை என்று ஆம்னி பஸ்களில் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இங்கிருந்து மதுரைக்கு 1300 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு 2500 என இரண்டு மடங்குக்கு மேலாக ஆம்னி பஸ் கிளீன் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் மக்கள் செல்வதால் இருக்கைகள் நிரம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று தொடர் விடுமுறை பண்டிகைக்காக நாட்களில் கட்டணம் உயர்வு பேசுவதும் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதும் அரசு சொல்வது தொடர்பை கதையாகி வருகிறது. ஆனால்ஆமினி பேருந்துகள் கட்டணம் அதிகமாக உயர்த்துவது வேடிக்கையாக உள்ளது இதனை அரசு கண்டு கொள்ள வேண்டும் என்று பயணிகள் தங்களது மனக்குமறலை கொட்டி உள்ளனர்,
English Summary
Oh my Ticket prices have doubled Passengers are shocked