பெண்கள் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு சிறுமி!  
                                    
                                    
                                   Odisha School Girl Abused and Childbirth 
 
                                 
                               
                                
                                      
                                            ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிடப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வில் பங்கேற்று திரும்பிய மாணவி விடுதி அறையில் பிரசவித்துள்ளார். மாணவியும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதிக்குள் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் மாணவி எப்படி கருவுற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர்கள் வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்தும் கவனக்குறைவாக இருந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
மாணவி கருவுற்றதற்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விடுமுறையில் வீட்டிற்கு சென்றபோது மாணவி கருவுற்றிருக்கலாம் என மாவட்ட நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Odisha School Girl Abused and Childbirth