தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!
October 9 TASMAC close in Salem district
மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளையும் கூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ; மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 9ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.

மேலும், அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 9ம் தேதி அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
October 9 TASMAC close in Salem district