"மாடு, கோழி, ஆடு எல்லாம் சாப்பிடுங்க அப்போதான் நல்ல தெம்பு கிடைக்கும்"- நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அருகே நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய சீமான் தனது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது :- "நம்முடைய பாரம்பரிய கலைகளை அதிலும் குறிப்பாக வீரக்கலையை அழிந்து போக விடாமல் பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. 

பாரம்பரிய கலையையோ வீரக்கலையையோ கற்றுக்கொள்வதற்கு பிள்ளைகளை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகள். எனது கிராமத்தில் வேறு யாரும் இந்தக் கலையை கற்கவில்லை. நான் மட்டுமே தனியாகச் சென்று கற்றேன். அப்போது என் ஊரே என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். 

இருந்தாலும், அதை பற்றியெல்லாம் என் அப்பா கவலைப்படாமல் என்னை ஊக்குவித்தார். மாட்டுக்கறி, கோழி, ஆடு எல்லாம் சாப்பிடுங்க. அப்போதான் தெம்பு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk party leader seeman speach in Veerakalai Pasarai function chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->