பி.எப்.ஐ அமைப்பு வேறு பெயரில் இயங்க வேண்டும் - சீமான் பேச்சு..! - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ அமைப்புடன் சேர்த்து மொத்தம் 8 இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி,  பி.எப்.ஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியதுடன், அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக்  உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் மத்திய அரசு முடக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தடை குறித்து பலரும் கருத்து தெரிவித்து நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது, 

''இந்த நாட்டில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான். ஆனால் அந்த இயக்கம் அதிகாரத்திற்கு வந்த திமிரில் ஜனநாயக ஆற்றல்களை முடுக்க நினைக்கிறது. 

பி.எப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் இதோடு நின்று விடாமல், மாற்று பெயரில், வேறு அமைப்பில் இயங்க வேண்டும். ஏனெனில், இந்த எதிர்ப்பு நாம் எதிர்பார்த்தது தான். பி.எப்.ஐ அமைப்பு வட மாநிலங்களில் படிக்கமுடியாத, தாழ்த்தப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேரை படிக்க வைத்துள்ளது. ஒருநாள் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டை விட்டு ஓடும் காலம் வரும். இந்த நாட்டில் மதத்தையும் தாண்டி ஒரு புனிதம் இருக்கிறது. அதுதான் மனிதம்'' என்று சீமான் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK leader seeman speech for pfi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->