விஜய் முதலில் காங்கிரசை தான் எதிர்க்க வேண்டும் - சீமான் பரபரப்பு பேட்டி..!!!
ntk leader seeman speech about tvk leader vijay
இன்று மதுரை பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினர்.
இந்த நிலையில் விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- "மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸ் கட்சியைதான் எதிர்க்க வேண்டும். ஊழல் என்று தெரிவித்தால் ஊழலுக்காக சிறை சென்ற கட்சி ஒன்று உள்ளது அதை எதிர்க்க வேண்டும்.
விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள். அவர்கள் அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
ntk leader seeman speech about tvk leader vijay