ராஜீவ் காந்தி குறித்த அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜர்.! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகியுள்ளார். 

கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்குக்கான முடிவு விரைவில் தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk leader seeman appear rajiv gandhi case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->